தென்னிந்தியாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் என அழைக்கப்படும் அல்லு அர்ஜூன் தொடர்ந்து வெற்றிபடங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் அட்லியுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். சன் பிச்சர்ஸ் அதிக பொருட்செலவில் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
ஷாருக்கான் நடித்த ஜவான் என்ற சூப்பர் ஹிட் படத்தை அடுத்து அல்லு அர்ஜூனுடன் அட்லி இணையும் படத்திற்கு தற்காலிகமாக AA22xA6 என்று அழைக்கப்படுகிறது. பேன் வேல்ட் படமாக உருவாகும் இந்த படத்தினை இந்திய திரையுலகமே எதிர்பார்த்துகொண்டிருக்கிறது. இந்திய சினிமாவிலேயே இதுவரை காணாத வகையிலான ஒரு பிரம்மாண்ட சயின்ஸ் ஃபிக்ஷன் ஃபேன்டசி திரைப்படமாக உருவாகி வருகிறது. கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சுமார் 800 கோடி ரூபாய் வரையிலான மிக அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் நாளை அலு அர்ஜூன் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் கிளிம்ப்ஸ் வீடியோ நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது. இது குறித்து படக்குழு இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





