Asha Bhosle: பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி

Published on: April 11, 2026
Asha Bhosle Suffers Cardiac Arrest Admitted to Hospital
---Advertisement---

இந்திய சினிமாவில் முக்கியமான பின்னணி பாடகிகளில் ஆஷா போஸ்லேவும் ஒருவர். மறைந்த புகழ்பெற்ற பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் இளைய சகோதரியான இவர் இந்திய திரையிசையில் தனது ஆளுமையை செலுத்தி வருபவர். எந்த வகை பாடலாக இருந்தாலும் தனது காந்த குரலால் அதற்கு உயிர் கொடுத்தவர் இவர்.

பாலிவுட் மட்டுமின்றி தமிழிலும் இவர் பாடிய பாடல்கள் சூப்பர் ஹிட் ரகம். குறிப்பாக இளையராஜா இசையில் மீரா’ படத்தில் ஓ பட்டர்பிளை , ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அலைபாயுதே படத்தில் இடம்பெற்ற செப்டம்பர் மாதம் மற்றும் ஜீன்ஸ் படத்தில் வெண்ணிலவே வெண்ணிலவே, வித்யாசாகர் இசையில் சந்திரமுகி படத்தில் வரும் கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் ஆகிய பாடல்கள் மிகபிரபலம்.

92 வயதான ஆஷா போஸ்லேவுக்கு கடந்த சில மாதங்களாகவே வயது மூப்பு காரணமாக லேசான உடல்நலக் குறைவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு மற்றும் கடுமையான சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டதை அடுத்து மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.