‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனுக்கு மிகப் பெரிய ஃபேன் ஃபாலோயிங் இருக்கிறது. இவருடைய ‘ஜென்டில் மேன், ஏழுமலை, முதல்வன்’ போன்ற பல படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் போர் அடிக்காது.

அர்ஜுன் நடிப்பில் 1996-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் தான் ‘சுபாஷ்’. இந்த படத்தை இயக்குநர் R.V.உதயகுமார் தான் இயக்கினார். இதை ‘சிவஶ்ரீ பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் K.S.சீனிவாசன் மற்றும் K.S.சிவராமன் தயாரித்தனர்.

சமீபத்தில், தயாரிப்பாளார் K.S.சீனிவாசன் கொடுத்த பேட்டியில் நடிகர் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் குறித்து பேசுகையில் “அர்ஜுன் சார் வந்து ரொம்ப நல்லவரு. ‘சுபாஷ்’ படத்துல கமிட்டான போது அவருக்கு பேசுன சம்பளம் 27 ஆயிரம் தான்.

அப்புறம் அவரோட ‘ஜென்டில் மேன்’ படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட்டாயிருச்சு. அவருக்கு பட வாய்ப்புகள் நிறைய வந்துச்சு. அவரோட சம்பளமும் 90 ஆயிரம் ஆயிடுச்சு. எங்களுக்கும் ‘சுபாஷ்’ படம் பெரிய வியாபாரம் ஆச்சு.

ஆனா, அர்ஜுன் சார் சம்பளம் பத்தி எங்கிட்ட எதுவுமே பேசல. அப்புறம் நானா அவரை கூப்பிட்டு, சார் இப்போ நீங்க 90 ஆயிரம் சம்பளம் வாங்குறீங்க. நான் உங்களுக்கு பேசுன சம்பளம் 27 ஆயிரம் தான், அட்லீஸ்ட் நீங்க வாங்குற சம்பளத்துல ஒரு பாதி கூட கொடுக்கலேன்னா எனக்கு அது கௌரவமா இருக்காது.

அதுனால நான் ஒரு 45 ஆயிரம் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறேன் சாருன்னு சொன்னேன். அதுக்கு அவர், சார் நான் உங்ககிட்ட பணம் கேக்கல. நான் 27 ஆயிரத்துக்கு தான் இதுல நடிக்க ஒத்துக்கிட்டேன். நீங்க 45 ஆயிரம் கொடுத்தாலும் கொடுங்க, 40 ஆயிரம் கொடுத்தாலும் பரவால்ல. எதுவா இருந்தாலும் உங்க இஷ்டம் சார். நானா எதுவும் கேக்க மாட்டேன்னு சொன்னாரு. அப்புறம் நான் அவருக்கு 45 ஆயிரம் சம்பளம் கொடுத்தேன்” என்று கூறியுள்ளார்.