">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இந்தியா பாகிஸ்தான் தொடர் நடத்த தேவையில்லை – அக்தருக்கு கபில்தேவ் பதில்!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையில் போட்டி நடத்தி அதன் மூலம் நிதி திரட்டலாம் என்ற சோயிப் அக்தரின் யோசனை கபில்தேவ் மறுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6300 ஐத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 149 ஆக உள்ளது. இதே போல அண்டைநாடான பாகிஸ்தானும் கொரோனா வைரஸால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 4000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 58 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் இரு நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு உதவ பல்வேறு வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடத்தி அதன் மூலம் நிதி திரட்டலாம் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவரது இந்த யோசனையை இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ் மறுத்துள்ளார். அவரின் கூற்றுப்படி ‘நாம் நிதி திரட்ட வேண்டிய அவசியமில்லை, போதிய நிதி உள்ளது. பிசிசிஐ ஒரு பெரியத் தொகையைக் கொடுத்துள்ளது. தேவைப்பட்டால் இன்னும் கொடுக்குமளவுக்கு அதனிடம் நிதி உள்ளது. நிலைமை தற்போதைக்கு சரியாகும் என்று தோன்றவில்லை. அதனால் போட்டிகளை நடத்தி வீரர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடாது.
மேலும் 3 போட்டிகளில் எவ்வளவு நிதி சேர்ந்து விடப்போகிறது? நாட்டை விடக் கிரிக்கெட் ஒன்றும் முக்கியமில்லை. நெல்சன் மண்டேலா மிகச்சிறிய சிறையில் 27 ஆண்டுகள் கழித்தார். அதை ஒப்பிடும்போது நாமெல்லோரும் வசதியாகவே இருக்கிறோம்.’ எனக் கூறியுள்ளார்.