நடிகர் மணிகண்டனுக்கு என மிகப் பெரிய ஃபேன் ஃபாலோயிங் இருக்கிறது. ‘குடும்பஸ்தன்’ படத்துக்கு பிறகு மணிகண்டன் நடித்து வரும் புதிய படம் ‘மக்கள் காவலன்’.
இதில் மணிகண்டன் போலீஸ் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை புதுமுக இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கி வருகிறாராம்.
நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்து வரும் இதற்கு பிரதீபன் செல்வரத்னம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனை இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘பிர்லா ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கிறது.
தற்போது, மணிகண்டனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக புதிய போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர். மேலும், படத்தை வருகிற டிசம்பர் 4-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.





