">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
சரக்கு கிடைக்கல.. சானிடைசரில் தண்ணீர் கலந்து கொடுத்த வாலிபர்.. இறுதியில் நேர்ந்த சோகம்
கோவை மாவட்டம் சூலூரில் வசித்து வருபவர் பெர்னாண்டஸ். இவர் அங்குள்ள ஒரு கேஸ் சிலிண்டர் ஏஜென்சியில் மக்களுக்கு சிலிண்டர் சப்ளை செய்யும் வேலை செய்து வந்தார். கொரோனா காரணமாக, கைகளை சுத்தம் செய்து கொள்ள கேஸ் ஏஜென்ஸி அவருக்கு சானிடைசரை வழங்கி இருந்தது.
பெர்னாண்டஸுக்கு மது பழக்கம் இருந்தது. தற்போது டாஸ்மாக் கடைகள் மூடியிருப்பதால், சானிடைசரில் ஆல்கஹால் இருப்பதால் போதைக்காக அதில் கொஞ்சம் நீர் கலந்து அவர் கடந்த சில நாட்களாக குடித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று அதிகாலை உடல்நலம் பாதிக்கப்பட்டு வலியால் துடித்தார். எனவே, அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சூலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.