">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
தாராளமாக செய்யுங்கள் தம்பி… டிவிட்டரில் கலக்கும் எடப்பாடி பழனிச்சாமி
கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமூக வலைத்தளங்களில் மக்களிடம் அவர் உரையாடி வருவது பாராட்டை பெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். எனவே, தங்களின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பலரும் பலவிதமாக உரையாடி வருகின்றனர். டிவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் அவர் பொதுமக்களின் கோரிக்கை மற்றும் புகார்களுக்கு உடனடியாக பதிலளித்து பலரையும் கவர்ந்து வருகிறது.
சமீபத்தில் ‘மரத்திலிருந்து தேங்காய் பறித்து வியாபாரம் செய்யலாமா?’ என ஒருவர் கேள்வி கேட்க ‘தாராளமாக செய்யுங்கள் தம்பி’ என பதிலளித்திருந்தார். அதேபோல், தன்னுடைய தாயின் இறுதி சடங்கில் கூட கலந்து கொள்ள முடியவில்லை என ஒருவர் புலம்ப அவருக்கு பழனிச்சாமி ஆறுதலும் கூறியிருந்தார்.
இப்படி தொடர்ந்து அவர் பொதுமக்களின் கருத்துகளுக்கு பதிலளித்து வருவதால் ‘எளிமையான முதல்வர்’ என அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தாராளமாக செய்யுங்கள் தம்பி! https://t.co/b0CWBUlZ57
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 13, 2020
மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அளிக்கிறது தம்பி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்களும் தங்கள் தந்தையும் மனோ தைரியத்துடன் இருங்கள். https://t.co/TMremKw7vT
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 13, 2020