">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
என் இதய துடிப்புக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – கணவருக்காக உருகிய ஸ்ரேயா!
விஜய், ரஜினி, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, விக்ரம் என தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை ஸ்ரேயா.
சில வருடங்களுக்கு முன்பு ஆண்ட்ரே கொஸ்ச்சீவ் என்கிற ஆங்கிலேயரை திருமணம் செய்து கொண்டார். தற்போது திரைப்படங்களில் நடிக்காத அவர் கணவருடன் வெளிநாடுகளுகு பயணம் செய்து அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில், கணவருடன் உள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ‘என் இதய துடிப்புக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ரசிகர்கள் அவரின் கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.