">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பிரசவலியில் 7 கி.மீ நடந்து பல் மருத்துவமனையில் பிரசவம் – பெங்களூரில் அதிர்ச்சி
கொரோனா வைரஸ் தொடர்பாக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்துக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதில், நோயாளிகள் மற்றும் அவசர தேவைகளுக்காக மருத்துவமனை செல்ல விரும்புவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த 14ம் தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால், மருத்துவமனைக்கு செல்ல எந்த வாகனமும் கிடைக்காததால் தனது கணவருடன் சேர்ந்து 7 கி.மீ தூரம் நடந்தே வந்துள்ளார். ஆனால், அதன்பின் அவருக்கு பிரசவவலி அதிகமானது. எனவே, அருகில் இருந்து பல் மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த பெண் உதவியாளின் துணையோடு குழந்தையை பெற்றெடுத்தார்.
அதன்பின் அவர்கள் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு பல் மருத்துவர் அனுப்பி வைத்துள்ளார்.