">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
மருத்துவர்கள் நடனமாடும் தெய்வங்கள்… தயவு செய்து மதியுங்கள் – விவேக் வெளியிட்ட வீடியோ
சென்னை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள 3 தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குனரான 55 வயது மருத்துவருக்கு கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் மரணமடைந்தார்.
அதையடுத்து, அண்ணாநகர் பகுதியில் உள்ள வேளாங்காடு கல்லறையில் அவரின் உடலை அடக்கம் செய்ய எடுத்து சென்றனர். ஆனால், அவரது உடலை இங்கு புதைக்கக் கூடாது எனக்கூறி அப்பகுதிமக்கள் சுமார் 20 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆம்புலன்ஸின் கண்ணாடியை அடித்து உடைத்தனர். எனவே, ஆம்புலன்ஸில் இருந்த இருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அதன்பின் வேறு பகுதியில் அவரின் உடல் புதைக்கப்பட்டது. இதுதொடர்பாக 20 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் மருத்துவர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இறந்த பின் இப்படி நடந்து கொள்ள வேண்டாம். இறந்தவர் உடலில் இருந்து கொரோனா தொற்று பரவாது. தற்போது அவர்கள் நடமாடும் தெய்வங்கள். உயிரோடு இருக்கும் போது மருத்துவர்களை மதிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள்’ என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
Selfless Doctors are walking Gods! If we can’t celebrate them when they live, atleast Letz honor their service when they depart! They need respectful send off atleast. https://t.co/mfAUVip9Lp
— Vivekh actor (@Actor_Vivek) April 20, 2020