">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அம்மா உணவகத்துக்கு ரூ.50 லட்சம் – அள்ளிக் கொடுக்கும் ராகவா லாரன்ஸ்
கொரானா நிவாரண நிதியாக திரைத்துறையினர் சிலர் சில லட்சங்களை கொடுத்துள்ள நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் ரு.3 கோடி தருவதாக அறிவித்தார். அதன்பின் அதுவும் போதாது என இன்னும் நிறைய திட்டமிருக்கிறது விரைவில் செய்வேன் என அறிவித்தார்.
இந்நிலையில், தற்போது தமிழக அரசின் அம்மா உணவகத்திற்கு ரூ.50 லட்சத்தை கொடுத்துள்ளார்.
கொரோனா வைரஸால் ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில் ஏழை மக்கள் உணவருந்த அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில்தான் சென்னை கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்களில் உள்ள அம்மா உணவகங்களின் செயல்பாட்டிற்காக ராகவா லாரன்ஸ் ரூ.50 லட்சத்தை கொடுத்துள்ளார்.
இதையடுத்து அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.