">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பேரன் போர் அடிச்சிடுச்சு… பேத்தியுடன் கொஞ்சி விளையாடும் ராதிகா சரத்குமார்!
உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மக்கள் வீட்டில் முடங்கி உள்ளனர் பிரபலங்களும் படப்பிடிப்பில் இல்லாத நிலையில் வீட்டில் இருக்கின்றனர்.
இவ்வாறான கடினமான சூழ்நிலையிலும் சில நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன. மக்கள் அனைவரும் முன்பை விட தங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுகின்றனர். இத்தனை நாள் வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருந்த நிலையில் தற்போது கிடைத்திருக்கும் ஓய்வில் குடும்பத்துடன் அன்பு பாராட்டுவதிலும், புரிந்து கொள்ளுதலும் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
அந்த வகையில் நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் இணைந்து இருக்கும் ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அவர்கள் மட்டுமில்லாது அவர்கள் குடும்பத்தில் புதிதாக இணைந்துள்ள ஒரு ஸ்பெஷலான ஹீரோவுடன் அவர்கள் அந்த புகைப்படத்தை ஷேர் செய்கின்றனர். யார் என்று கேட்டால் நடிகை ராதிகாவின் மகள் ரயானேவின் மகளாகிய குட்டி பேத்தியுடன் தான் ராதிகாவும், சரத்குமாரும் கொஞ்சி மகிழ்கின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் குழந்தைக்கு நடிகை ராதிகாவின் பெயரை ஒட்டி ரதியா என்ற பெயரை சூட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.