Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சென்னையில் 27 செய்தியாளர்களுக்கு கொரோனா – அதிர்ச்சி செய்தி

உலகளவில் கொரோனாவின் தாக்கம் கொஞ்சமும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்தியாவிலும் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். 573 பேர் உயிரிழந்துள்ளனர்.

8f28b6be7a52a22749993e6f469caab3

தமிழ்நாட்டிலும் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், மே 3ம் தேதி வரை தமிழக அரசு ஊரடங்கு எவ்வித தளர்வும் இல்லாமல் தொடரும் என அறிவித்துள்ளது தமிழகத்தில் இதுவரை 1520 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் அதிர்ச்சி என்னவெனில் இந்த நோயால் பொதுமக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மருத்துவர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக இது தொடர்பான செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

சென்னையில் மட்டும் தொலைக்காட்சி செய்தி சேனலில் பணியாற்றும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. செய்தியாளர்கள் செய்திகளை சேகரிக்க பல இடங்களுக்கும் செல்பவர்கள். எனவே, பலர் மூலமாகவும், அல்லது இவர்கள் மூலமாக பலருக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினருக்கும் பொருந்தும்.  எனவே, அரசு இவர்களுக்கு தகுந்த பாதுகாப்பினை ஏற்படுத்தி தர வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. அதோடு, அரசு தரப்பில் யாரும் செய்தியாளர் சந்திப்பை நடத்தக்கூடாது என பத்திரிக்கையாளர்கள் சங்கங்களும், அரசியல் தலைவர்களும் கூறி வருகின்றனர்.

Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top