">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அவசரத்திற்கு உதவிய ஆட்டோ ஒட்டுனர் ; அபராதம் விதித்த போலீஸ்: என்ன ஆச்சு பாருங்க?
கொரோனா வைரஸ் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் சரியான காரணம் மற்றும் ஆவணங்களோடு செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் வசிக்கும் ஆட்டோ ஒட்டுனர் ஒருவர், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணின் மகனின் மருத்துவ சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார். திரும்பி வரும் போது போலீசார் அவரை மடக்கியுள்ளனர். தகுந்த ஆவணங்களை காட்டிய பின்பும் அவருக்கு ரூ.500 அபராதம் விதித்து விட்டனர்.
இந்த தகவலை அவர் டிவிட்டர் மூலம் நெல்லை மாவட்ட காவல் ஆணையாளர் அர்ஜூன் சரவணனுக்கு தெரிவித்து, அந்த அபாராத தொகையை ரத்து செய்ய ஏற்பாடு செய்யும்படி வேண்டுகோள் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து இதுபற்றி விசாரித்த அர்ஜூன் சரவணன் அவரது அபாரதத்தொகையை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்தார். அந்த ஓட்டுனர் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
காவல் ஆணையாளர் அர்ஜூன் சரவணன் தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் நெல்லை மாவட்ட பொதுமக்களிடம் நற்பெயரை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதிப்பிற்குறிய திரு @ArjunSaravanan5 ஐயா..
நான் பேட்டை பகுதி ஆட்டோ ஓட்டும் தொழிலாளன்
இன்று காலை 10-50 மணியளவில் எனது வீட்டின் அருகில் வசிக்கும் பெண் ஒருவர் எனது வீட்டிற்கு வந்து, அவரது 4 வயது குழந்தைக்கு உடம்பு சரியில்லை எனவும், கடந்த இரண்டு நாட்களாக தூங்கவில்லை எனவும், 1/2 pic.twitter.com/IHC9m4ORyd
— Sahil.j (@Sahilj15) May 1, 2020