">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
தொலைக்காட்ட்சியில் பாண்டவர் பூமி – சேரணும் அருண் விஜய்யும் நெகிழ்ச்சி!
நடிகர் அருண் விஜய்க்கு முதன் முதலில் வெற்றிப்படமாக அமைந்த பாண்டவர் பூமி திரைப்படம் குறித்து சேரன் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
நடிகர் அருண் விஜய்க்கு முதன் முதலில் வெற்றிப்படமாக அமைந்த பாண்டவர் பூமி திரைப்படம் குறித்து சேரன் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான பாண்டவர் பூமி திரைப்படம் வெற்றிபெற்ற நிலையில் அதுவரை வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த அருண் விஜய்க்கு திருப்புமுனைப் படமாக அமைந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் நேற்று சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகியது. அதையடுத்து இயக்குனர் சேரன் ‘அருண் விஜய்யை குறிப்பிட்டு தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘இன்று பாண்டவர் பூமி சன் தொலைக்காட்சியில். உங்கள் பெயரை இந்த சினிமா உச்சரிக்க ஆரம்பித்த முதல் படம் என நினைக்கிறேன். உங்கள் தன்னம்பிக்கையும் முயற்சியுமே உங்கள் பலம்.. இன்னும் நெடுந்தூரம் போங்கள். பார்த்து ரசிக்கிறேன். நீங்கள் கடந்த பாண்டவர் பூமி எனும் மைல்கல்லில் அமர்ந்தபடி. நன்றி.’ எனத் தெரிவித்திருந்தார்.
இயக்குனர் சேரனின் இந்த டிவீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக அருண் விஜய் ‘என்றும் என் நினைவில் மறவாத ஒரு மைல்கல்– பாண்டவர் பூமி! அதன் மூலம் பல நுணுக்கங்களை எனக்குக் கற்றுக்கொடுத்தவர் நீங்கள். நேற்றுதான் படப்பிடிப்பு நிறைவு பெற்றது போல் உள்ளது. உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி. செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது!!’ எனக் கூறியுள்ளார்.