Connect with us

latest news

“இந்தியனாக இருந்தால் உள்ளே வராதே” – நடிகை காட்டம்!

ஆஸ்திரேலியாவின் முழு நேர கார் ரேஸரான ரெனீ கிரேசி ( 25 ) கார் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதற்கிடையில் கொரோனா ஊரடங்கினால் வருமானமின்றி தவித்த அவர்  திடீரென ஆபாச நட்சத்திரமாக உருவெடுத்தார்.

1eaa675fae4b7e705a70cd102b01bd9a

அடுத்தவர்கள் என்னைப் பற்றி தவறாக பேசுவதை எண்ணி நான் வருத்தப்பட்டேன். நான் இந்த வருமான பிரச்னையில் இருந்த மீள எவ்வளவோ முயற்சித்தேன். ஆனால், என் கனவு சுக்கு நூறாகிவிட்டது. இதையெல்லாம் தாண்டி நான் கனவில் கூட நினைத்திராத அளவிற்கு என்னுடைய வருமானம் உயர்ந்துள்ளது. யார் என்னை எப்படி அழைத்தாலும் பரவாயில்லை. தற்போது நான் நன்றாக பணம் சம்பாதிக்கிறேன். அதில் எனக்கு முழு திருப்தி இருக்கிறது” என சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவரது தளத்திற்கு வீடியோக்களை பார்க்க வரும் இந்தியர்கள் அவரது புகைப்படம் மற்றும் வீடியோவை அங்கிருந்து எடுத்து, வேறு தளங்களில் பயன்படுத்துவதாகவும், இந்தியாவில் சிலர் போலியாக சமூக வலைதள கணக்குகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ரெனீ  “இந்தியனாக இருந்தால் உள்ளே வராதே… உன்னை வரவேற்கவில்லை என்று அவர் காட்டமாக பதிவிட்டுள்ளார். மேலும், இதற்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Continue Reading

More in latest news

To Top