தளபதி 64 படத்தின் தலைப்பு இதுதான்? – கசிந்த தகவல்

Published On: December 30, 2019
---Advertisement---

d18a773c4de9ac06fd1b7e4ae64b8a55-2

பிகில் திரைப்படத்திற்கு பின் மாநாடு, கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சென்னை, கர்நாடகா மாநிலம் ஆகியவற்றில் நடைபெற்றது. 

அதன்பின் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக லண்டன் சென்ற விஜய் இன்னும் திரும்பவில்லை. எனவே, அவர் சென்னை திரும்பிய பின் மீண்டும் ஜனவரி 20 தேதிக்கு மேல் இப்படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃப்ர்ஸ்ட்லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இப்படத்திற்கு ஜேம்ஸ் துரைராஜ் என்ற தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. சுருக்கமாக ஜேடி என அவரை மற்றவர்கள் அழைப்பதுபோல் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் தமிழ் புத்தாண்டில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment