சித்தியுடன் கள்ளக்காதல்.. தங்கையிடமும் காம வெறி.. தம்பியை கொலை செய்த காம கொடூரன்…

Published On: December 31, 2019
---Advertisement---

7ccecdc319cdaf08a4bbaa6166bca7ce

கடந்த ஜூலை மாதம் உளுந்தூர் பேட்டை காப்புக்காட்டில் 10ம் வகுப்பு மாணவன் சிவக்குமார் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தான். போலீசாரின் விசாரணையில் அந்த காட்டுப்பகுதியில் சிலர் அழகிகளை உல்லாசத்திற்கு அழைத்து வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். எனவே, அதை நேரில் பார்த்ததால் சிறுவனை யாரோ கொலை செய்திருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வந்தனர். 

ஆனால், தற்போது விசாரணையில் பல திடுக்கிடும் காரணங்கள் தெரியவந்துள்ளது.  கொலை செய்யப்பட்ட சிறுவன் சிவக்குமார் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான். சிறுவனின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சிவக்குமாரின் அண்ணன் சரத்குமார் தனது சொந்த சித்தியிடமே கள்ள உறவு வைத்திருந்தான். இதை ஒரு நாள் நேரில் பார்த்த தனது தங்கையிடமும் அவன் அத்துமீறினான். இதை வெளியே கூறினால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளான். அவன் முரடன் என்பதால் அப்பெண்ணும் வெளியே கூறவில்லை.

இந்நிலையில், சரத்குமார் சித்தியுடன் உல்லாசமாக இருந்ததை சிவக்குமார் ஒரு நாள் நேரில் பார்த்து விட்டான். எனவே, அவன் வெளியே கூறினால் எல்லாம் தெரிந்து விடும் என்பதால் அவனை கொலை செய்வது என சரத்குமார் முடிவெடுத்தான். இதற்கு அவரின் தங்கை மற்றும் சித்தி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளர் என்பதுதான் பேரதிர்ச்சி.

முயல் வேட்டைக்கு செல்லலாம் என சிவக்குமாரை அழைத்து சென்ற சரத்குமார், ஒரு பாறை இடுக்கை காட்டி ‘உள்ளே முயல் இருக்கிறது பிடி’ எனக்கூறியுள்ளான். சிறுவனும் தலையை உள்ளே நுழைக்க அவனின் காலை சித்தியும், தங்கையும் பிடித்துக்கொள்ள சரத்குமார் அரிவாளால் சிவக்குமாரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளான் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment