சிம்பு இன்னும் அந்த ஒரு கோடியைத் தரவில்லை – லிஸ்டில் லிங்குசாமியும் இருக்கார் !

Published On: December 31, 2019
---Advertisement---

7ff3f57918f4e0a0c7ed4747cec5f00b

சிம்புவிடம் தான் கொடுத்த ஒரு கோடி அட்வான்ஸை இன்னும் வாங்கவில்லை என இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்பு பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு திருப்பித் தராமல் ஷூட்டிங்குக்கும் வராமல் இழுத்தடிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இதில் பி எல் தேனப்பன், மைக்கேல் ராயப்பன் ஆகியோர் வெளிப்படையாக இதை வெளியே சொல்லியும் உள்ளனர்.

இந்நிலையில் முன்னணித் தயாரிப்பாளரும் இயக்குனருமான லிங்குசாமி தன் இயக்கத்தில் வேட்டை என்ற படத்தில் நடிக்க சிம்புவுக்கு ஒரு கோடி அட்வான்ஸ் கொடுத்ததாகவும் ஆனால் 8 ஆண்டுகளாக இன்னும் அதைத் தரவில்லை என்றும் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment