
தமிழில் திருட்டுப்பயலே, வெற்றிக்கொடிகட்டு, சந்திரமுகி உள்ளிட்ட பல தமிழ்படங்களில் நடித்தவர் மாளவிகா. சுமேஷ் மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதனால் சினிமாவில் நடிப்பதை சில வருடங்கள் தவிர்த்து வந்த மாளவிகா. தற்போது மீண்டும் சினிமாவல் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். எனவே, தனது புகைப்படங்களை தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஒரு பார்ட்டியில் கையில் மதுபாட்டிலுடன் நிற்கும் ஒரு புகைப்படத்தை மாளவிகா வெளியிட்டுள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் அவரை கடுமையாக திட்டி வருகின்றனர்.




