மாஸ்டர்… விஜய்க்கு உண்மையிலேலே இது மாஸ் டைட்டில்தான்…

நடிகர் விஜய் நடித்து வரும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

5a0ec281bb9633a8b64cb7f546ec9460

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய திரைப்படத்தின் தலைப்பு ‘மாஸ்டர்’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பு விஜய் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

ஏனெனில், இவ்வளவு ஆளுமையான, மாஸான டைட்டில் இதுவரை விஜய் நடித்த திரைப்படங்களுக்கு வைக்கப்படவில்லை. பொதுவாக ஒரு குழுவை வழி நடத்துபவரையும், ஏதேனும் ஒரு கலையை நமக்கு சொல்லிக் கொடுப்பவரையும் நாம் மாஸ்டர் என்று அழைக்கிறோம்.

அந்த வகையில் இப்படத்திற்கு ‘மாஸ்டர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய் இளம் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. எனவே, மாணவர்களை வழி நடத்துவதால் மாஸ்டர் எனப்பொருள் கொண்டாலும், தலைப்பிற்கு வேறு பின்னணியும் இருப்பதாக படக்குழு கூறுகிறது.

eea891a9ee58e1a8f932450b83027c76

இயக்குனர் லோகேஷ் கனராஜ் என்பதால் எப்படிப் பார்த்தாலும் விஜய் ரசிகர்களுக்கு  மாஸ்டர் திரைப்படம் மாபெரும் விருந்தாக அமையப்போகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *