
பொன்னியின் செல்வனின் முதல்பகுதி மட்டுமே திரைப்படமாக திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அடுத்தடுத்த சீசன்கள் வெப் சீரிஸாக வெளிவரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது கனவுப்படைப்பான பொன்னியின் செல்வனை ஒருவழியாக திரைக்கதையாக்கி தாய்லாந்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் மணிரத்னம். இந்திய திரையுலகில் உள்ள பெயர் பெற்ற நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
பொன்னியின் செல்வன் நாவலின் வாசகர்களுக்கு எழுந்த முக்கியமான கேள்வியாக அவ்வளவு பெரிய நாவலை எப்படி இரண்டரை மணி நேர படமாக சுருக்க முடியும் என்பதே. அதனால் படம் இரண்டு பாகமாக வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது முதல் பகுதி மட்டுமே திரையரங்கில் திரைப்படமாகவும் அடுத்தடுத்த சீசன்கள் வெப் சீரிஸாக வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. வெப் சீரிஸுக்கு உருவாகி வரும் உலகளாவிய மார்க்கெட்டால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Leave a Reply