
காங்கிரஸ் கட்சி நடிகை குஷ்புவுக்கு செய்தி தொடர்பாளர் பதவி கொடுத்து அழகு பார்த்துள்ள நிலையில் அதற்கு இணையான பதவியை நடிகை கௌதமிக்கு பாஜக கொடுக்க திட்டமிட்டு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன
நடிகை கௌதமி கிட்டத்தட்ட சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட்டிருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்
இதனையடுத்து அவர் தமிழகத்தில் பாஜகவை வளர்க்கும் நோக்கத்திலும் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார் என்பதும், அவர் பிரச்சாரம் செய்த இடங்களில் நல்ல கூட்டம் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கௌதமியின் அரசியல் ஆர்வத்தை பார்த்து அவருக்கு பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பதவி வழங்க பாஜக மேலிடம் திட்டமிட்டிருப்பதாகவும் விரைவில் பாஜகவின் தமிழக தலைவர் பதவிக்கான தேர்வு முடிந்ததும் கௌதமியை செய்தி தொடர்பாளராக அறிவிக்க பாஜக தலைமை முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

Leave a Reply