ஆப்ரேஷன் சக்ஸஸ்– நெல்லை கண்ணன் கைதை கொண்டாடிய ஹெச் ராஜா !

Published on: January 2, 2020
---Advertisement---

02a68ce06d2eff065c8805067014dfc6-1

பெரம்பலூரில் வைத்து நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதை அடுத்து பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய கூட்டமைப்பு ஒன்று ஒருங்கிணைத்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மூத்த காங்கிரஸ் காரரான நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைக் கடுமையாக விமர்சித்தார் நெல்லை கண்ணன். அவ்வாறு பேசியதற்காக அவரைக் கைது செய்யவேண்டுமென பாஜகவினர் குரலெழுப்பினர். இதையடுத்து உடல்நலம் சரியில்லை என நெல்லை கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நெல்லை கண்ணன் நாடகம் ஆடுகிறார் என்றும் அவரை உடனே கைது செய்ய வேண்டும் எனவும் தமிழக பாஜக சென்னையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டது. அதையடுத்து நேற்று இரவு 9 மணியளவில் பெரம்பலூரில் வைத்து போலிஸார் கைது செய்தனர். இதையடுத்து அவரது கைதை கொண்டாடும் விதமாக ஹெச் ராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் ‘ஆப்ரேஷன் சக்ஸஸ்’ எனத் தெரிவித்துள்ளார். இந்த கைதுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment