">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
எப்போதும் குழந்தையாக இருங்கள் – அமலா பாலின் இன்றைய தத்துவம் இது தான்!
சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து நடிகை அமலா பால் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் குதிரை வண்டியில் குழந்தை போல் அமர்ந்திருக்கும் கியூட்டான ப்புகைப்படத்தை வெளியிட்டு ,”உள்ளிருக்கும் உங்கள் குழந்தையை மீண்டும் உயிர்ப்பிக்கவும். அவளுடைய மென்மையைப் பயன்படுத்துங்கள், அவளுடைய தயவையும் மகிழ்ச்சியையும் உணருங்கள், அவளை யாரும் உங்களிடமிருந்து அழைத்துச் செல்ல வேண்டாம். எதுவாக இருந்தாலும், எல்லா நேரங்களிலும் நீங்கள் உண்மையிலேயே நிம்மதியாக இருக்க முடியும்.” என எப்போதும் குழந்தை போல் மகிழ்ச்சியாக இருக்க சொல்லி தத்துவம் பேசியுள்ளார்.
தினம் தினம் ஒரு தத்துவம் கூறி அதற்கு ஏற்றாற்போல் போட்டோ ஷூட் நடத்தி வரும் அமலா பால் இந்த லாக்டவுனில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார் கோலிவுட்டின் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துவிட்டது. ஆனாலும், அமலா பால் அதை பற்றியெல்லாம் வருத்தப்படாமல் சிங்கிள் வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழ்ந்து வருகிறார்.