">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நண்பர்கள் தினத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த “பிரண்ட்ஷிப்” படக்குழு!
கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர்.
பிக்பாஸில் கிடைத்த புகழை வைத்து லாஸ்லியா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அதுவும் முதல் படத்திலே பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக . “பிரண்ட்ஷிப்” என்ற படத்தில் நடித்துள்ளார். ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கும் இப்படத்தை ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.
அர்ஜுன், லாஸ்லியா, ஹர்பஜன் சிங் , சதிஷ் பல பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்று நண்பர்கள் தினத்தை முன்னிட்டு படத்தின் சில காட்சிகளின் தொகுப்புகள் அடங்கிய வீடியோவை வெளியிட்டு “Glimpse of Friendship” என கேப்ஷனுடன் தமிழ், தெலுங்கு , இந்தி என மூன்று மொழிகளில் படத்தின் ஹீரோ ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ளார்.