விடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி… 80 வயதில் ஊராட்சி தலைவர் –  வாகை சூடிய வீரம்மாள்

நடந்து முடிந்த கிராமப்புற ஊராட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் 80 வயது மூதாட்டி ஒருவர் ஊர் தலைவர் ஆகியுள்ளார்.

635366efb43ef0ecf138fce6e201379b-1

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ம்தேதிகளில் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியம் அரிட்டாபட்டி ஊராட்சியில் 80 வயது வீரம்மாள் ஊராட்சி தலைவர் பதவியை கைப்பற்றினார். 198 ஓட்டு வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றுள்ளார்.

f9874b231cdf74efe867a5c4524a91b1-1

இதற்கு முன் இருமுறை அவர் இதே பதிவிக்கு போட்டியிடுட் தோல்வி அடைந்திருந்தாலும், மனம் தளராமல் இந்த முறை போட்டியிட்டு வீரம்மாள் வெற்றி வாகை சூடியுள்ளார்.

இதையடுத்து இவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *