">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
சூதாட்டமெல்லாம் நடக்கல… போலிஸ் ஸ்டேஷன் போனது இதுக்குதான்- நடிகர் ஷாம் பதில்!
நடிகர் ஷாம் வீட்டில் சூதாட்டம் நடந்ததாக கடந்த 27 ஆம் தேதி போலிஸார் சோதனையிட்டு அவரைக் கைது செய்த நிலையில் ஷாம் இப்போது அதற்குப் பதிலளித்துள்ளார்.
நடிகர் ஷாம் வீட்டில் சூதாட்டம் நடந்ததாக கடந்த 27 ஆம் தேதி போலிஸார் சோதனையிட்டு அவரைக் கைது செய்த நிலையில் ஷாம் இப்போது அதற்குப் பதிலளித்துள்ளார்.
நடிகர் ஷாமுக்கு சொந்தமான நுங்கம்பாக்கம் வீட்டில் சூதாட்டம் நடப்பதாக போலிஸாருக்கு தகவல் வரவே அவர்கள் அங்கு சென்று ஜூலை 27 ஆம் தேதி சோதனை நடத்தினர். அதன் பின்னர் ஷாம் உள்பட 14 பேரைக் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று சொந்த ஜாமீனில் விடுதலை செய்தனர். இந்த சம்பவம் தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இப்போது வெளியில் வந்துள்ள ஷாம் தன் மீதான குற்றச்சாட்டு குறித்து பதிலளித்துள்ளார். அதில் ‘நான் எந்த சூதாட்டத்தையும் நடத்தவில்லை. நாங்கள் நண்பர்கள் அனைவரும் சந்தித்து கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை விளையாடுவோம். ஆனால் இப்போது லாக்டவுன் காரணமாக அவ்வப்போது சந்தித்து போக்கர் போன்ற விளையாட்டுகளை விளையாண்டோம். அதில் யார் தோற்றார் வென்றார் என்பதை ட்ராக் செய்வதற்காக போக்கர் காயின்களைப் பயன்படுத்தினோம். நாங்கள் என்றுமே பணம் வைத்து விளையாடியதில்லை. சில நேரங்களில் தோற்றவர் அனைவருக்குமான பில்லை கட்டுவார். அவ்வளவுதான்.
போலிஸார் வந்து என் வீட்டில் சோதனை நடத்தினர். அதற்கு நான் முழு ஒத்துழைப்பு அளித்தேன். பின்னர் காவல் நிலையத்துக்கு ஒரு கையெழுத்து வாங்குவதற்காக அழைத்துச் சென்று அனுப்பினர். ஆனால் என் வீட்டில் கூட்டம் கூடுவதை நான் தவிர்த்திருக்கலாம். அது என்னுடையத் தவறுதான். இனிமேல் அதுபோல நடக்காது’ எனத் தெரிவித்திருக்கிறார்.