">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா: தீவிர சிகிச்சை!
கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை இந்த நோய் தொற்றினால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்ப்போது பிரபல பாடகர் எஸ்பிபிக்கும் கொரோனா பாதித்துள்ளாக செய்தி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், ஆம், கடந்த சில நாட்களாக நான் உடன் நிலை சரியில்லாமல் சோர்வாக இருப்பதை உணர்ந்தேன். அத்துடன், லேசாக சளி மற்றும் விட்டு விட்டு காய்ச்சல் இருந்து வந்தது. இதனை சுதாரித்துக்கொண்டு நான் டெஸ்ட் எடுத்து பார்த்ததில் லேசான தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.
பின்னர் வீட்டிற்கு சென்று என்னை தனிமை படித்திக்கொள்ள கூறினார்கள். ஆனால், என் குடும்ப உறுப்பினர்களின் உடல் நலத்திற்கு நல்லதல்ல என உணர்ந்தே நான் மருத்துவமையில் அட்மிட் ஆனேன். யாரும் பயப்படவேண்டாம். நான் இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்று விடுவேன் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.