">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
மீரா மிதுனுக்கு எதிராக போராட்டம் செய்வோம் – உச்சகட்ட கோபத்தில் விஜய் ரசிகர்கள்!
மீரா மிதுன் விஜய் மற்றும் சூர்யா ஆகியவர்களின் குடும்ப பெண்களைப் பற்றி தவறாக பேசியது குறித்து ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.
மீரா மிதுன் விஜய் மற்றும் சூர்யா ஆகியவர்களின் குடும்ப பெண்களைப் பற்றி தவறாக பேசியது குறித்து ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.
நடிகை மீரா மிதுன் கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமாவின் பிரபலங்கள் ஒவ்வொருவராக தாக்குதல் நடத்தி வருகிறார். அந்த வரிசையில் நடிகர் சூர்யாவுக்கு நடிப்பே வராது என சொல்ல அது அவரின் ரசிகர்களை பயங்கர கோபத்துக்கு ஆளாக்கியது.
அதை அடுத்து அவர்கள் மீரா மிதுனை சமூகவலைதளங்களில் ஆபாசமாக திட்ட ஆரம்பித்தனர். ஆனால் அப்படி ஆபாசமாக திட்டியவர்களில் பலர் சூர்யா ரசிகர்கள் இல்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தன்னை திட்டியவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள மீரா மிதுன் ‘இனிமேல் என்னை யாராவது ஆபாசமாக திட்டினால் , நானும் சூர்யாவின் மனைவி ஜோதிகாவையும், விஜய்யின் மனைவி சங்கீதாவை என்னை சொல்லி திட்டும் அதே வார்த்தையில் திட்டுவேன் (ஆபாசமான அந்த வார்த்தையை ஓபனாக சொல்லி காட்டுகிறார்) எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் மீரா மிதுன் மேல் கடுமையான கோபத்தில் உள்ளனர். விஜய்யின் ரசிகரான ஈ சி ஆர் சரவணன் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘ஒருவரின் நடிப்பைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட குடும்ப வாழ்வை விமர்சிக்கக் கூடாது. மீராமிதுன் தான் பேசியதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவரை யாரும் படங்களில் புக் செய்ய கூடாது. அப்படி செய்தால் நாங்கள் போராட்டம் செய்வோம்’ எனக் கூறியுள்ளார்.