
தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்த ’அசுரன்’திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்தப் படம் தெலுங்கு உட்பட ஒரு சில மொழிகளில் ரீமேக் செய்ய தற்போது திட்டமிட்டு வருகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மஞ்சுவாரியர் நடித்த கேரக்டரில் நடிக்க நடிகை பிரியாமணி ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முன்னதாக இந்த கேரக்டரில் நடிக்க ஸ்ரேயா சரண் பரிசீலனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது பிரியாமணி நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
‘பருத்திவீரன்’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி அதன் பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் முடிந்தவுடன் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை பிரியாமணி தற்போது அசுரன் தெலுங்கு ரீமேக் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தில் தனுஷ் வேடத்தில் நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply