
மக்களவை மற்றும் மாநிலங்களவை நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மேற்கு வங்க மாநில முதல்வர் முதல்வர் மம்தா பானர்ஜி போராட்ட களத்தில் இறங்கியுள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத்துக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. வடகிழக்கு மாநிலங்களைப் போல மேற்கு வங்கத்திலும் போராட்டம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அம்மாநிலத்தில் 4 நாட்களாகப் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் இப்போது மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
இந்த போராட்டத்தின் போது மேற்கு வங்க மாநிலத்துக்குள் தேசிய குடியுரிமைச் சட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்ற கோஷத்துடன் மக்கள் பேரணியாகச் சென்றனர். முதல்வரின் பேரணியை ஆளுநர் கடுமையாகக் கண்டித்துள்ளார்.



