
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச அளவில் உயர்ந்து கொண்டே உள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, தங்கத்தின் தேவை அதிகரிப்பு மற்றும் தங்கத்தில் அதிக முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் ஆகிய காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது
இந்த நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்றைய தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு ரூ.30,344 என்பது குரிப்பிடத்தக்கது. இந்த விலை இதுவரை இல்லாத உச்சத்தில் தங்கம் விலை என்பது குறிப்ப்பிடத்தக்கது
கடந்த ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு ரூ.30,100ஆக இருந்த நிலையில் அதன்பின் படிப்படியாக குறைந்து கடந்த மாதம் ரூ.38,500வரை குறைந்தது. அதன்பின் மீண்டும் உயர்ந்து இன்று ரூ.30,344 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 20% தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் இந்த ஆண்டு அதைவிட அதிகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தங்கத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Leave a Reply