">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஓரமா போயி உட்காரும்மா நாங்களும் டஃப் கொடுப்போம் – ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கும் மனோ பாலா!
நடிகர், நடிகைகள் இந்த கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்புகள் ஏதுமில்லாததால் வீட்லேயே ஓய்வெடுத்து நிறைய புது புது விஷயங்களில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் நடிகைகள் பெரும்பாலும் வித விதமான போட்டோ ஷூட் நடத்தி மார்க்கெட் இறங்கிவிடாமல் ரசிகர்ளை கைக்குள்ளே வைத்து வருகின்றனர்.
ஆனால், சமீப நாட்களாக மாடர்ன் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில், நடிகர் விஜய் சேதுபதி , வில்லன் நடிகர் சாய் தீனா , காமெடி நடிகர் சென்ட்ராயன் உள்ளிட்ட பலரும் போட்டோ ஷூட் நடித்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்ப்போது நடிகர் மனோ பாலா போட்டோ ஷூட் நடத்தி அசத்தியிருக்கிறார்.
கண்ணை பறிக்கும் மஞ்சள் நிற கோட் அணிந்து கொண்டு செம ஸ்டைலிஷ் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு ” நாங்களும் டஃப் கொடுப்போம்ல” என்று பதிவிட்டுள்ளார். இதில் ஹைலைட் என்னவென்றால் நேற்று இதே போன்று சீரியல் நடிகை ஷிவானி சேரில் அமர்ந்து போட்டோ ஷூட் நடத்திய ஸ்டில் ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.