">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஒரு ஹிட் படம் கொடுத்துட்டு இம்புட்டு அதுப்பு இருக்கக்கூடாது – ஈவு இரக்கமில்லாத பிரபாஸ்!
பாகுபலி படத்திற்கு பிறகு இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் நடிகர் பிரபாஸ். அந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சாஹோ படத்தில் நடித்திருந்தார். ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் பிளாப் ஆகிவிட்டது.
பாகுபலிக்கு பிறகு பிரபாஸின் மார்க்கெட் உச்சத்தை தொட்டதால் சம்பளத்தை பல மடங்கு ஏத்திவிட்டார். கதை சொல்ல இயக்குனர்கள் சென்றால் 100 கோடி சம்பளம் கேட்டு ஹார்ட் அட்டாக் கொடுத்துவிடுகிறாராம். சம்பளத்தில் கறாரா இருப்பதால் அவரை படங்களில் ஒப்பந்தம் செய்ய யோசிக்கிறார்களாம்.
இதனாலே கிடைக்கும் பட வாய்ப்புகளை தொடர்ந்து இழந்து வருகிறார். ஏற்கனவே கொரோனா ஊரடங்கில் திரைத்துறை பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் நேரத்தில் இப்படியே சொல்லிக்கொண்டு இருந்தால் உங்களது மார்க்கெட் சர சரன்னு குறைத்து அடையாளமே தெரியாமல் போய் விடுவீர்கள் என்று தயாரிப்பாளர்கள் புலம்பி வருகின்றனர்.