நீங்க இப்படி செய்வீங்கன்னு நெனக்கல… என்னை தோற்கடித்ததற்கு நன்றி – வேட்பாளரின் உருக்கமான போஸ்டர் !

உள்ளாட்சித் தேர்தலில் தன்னை தோற்க வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வேட்பாளர் ஒருவர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

582154fa3fbf4c0244ec022387aa3837

உள்ளாட்சித் தேர்தலில் தன்னை தோற்க வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வேட்பாளர் ஒருவர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று காலையில் இருந்து இன்று மதியம் வரை அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் அடிப்பது வழக்கம். ஆனால் முதல்முறையாக தோற்ற வேட்பாளர் ஒருவர் தனக்கு வாக்களிக்காத மக்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அவரது போஸ்டரில் ‘கோத்துவார்ப்பட்டி 2 ஆவது வார்டு உறுப்பினராக கட்டில் சின்னத்தில் போட்டியிட்ட ஆர் முருகேசன் ஆகிய என்னை தோற்கடித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிக்கு நீங்க இப்படி செய்வீங்கன்னு கனவுல கூட எதிர்பார்க்கல’ எனத் தெரிவித்துள்ளார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *