">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
38 இந்திய பாரம்பரிய உடையில் பிக்பாஸ் ஜூலி – வீடியோ!
நம் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆன ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார். முதல் மூன்று சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை. இருந்தும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார்.
தன்னை கிண்டல் செய்பவர்களுக்கு பெரிதாக ரியாக்ட் செய்யாவிட்டாலும் சில சமயம் கடுப்பாகி நெத்தியடி பதில் கொடுத்து கிண்டல் செய்பவர்களின் மூக்கை உடைப்பார். சமீப நாட்களாக ட்விட்டர் , இன்ஸ்டா என சமூகவலைத்தள பக்கங்களில் வித விதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில் தற்ப்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு 24 மணி நேரத்தில் இந்தியாவில் உள்ள 38 விதமான ட்ரடிஷனல் உடை அணிந்து வித விதமான தோற்றத்தில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். ஜூலியின் இந்த புது முயற்சியை கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர். இதோ அந்த முழு வீடியோ.