">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
தந்தை நன்றாகத்தான் இருக்கிறார்.. பயப்பட ஒன்றுமில்லை.. எஸ்.பி. சரண் வெளியிட்ட வீடியோ…
தமிழ் சினிமாவின் மூத்த பாடகர்களில் ஒருவரான எஸ் பி பாலசுப்ரமண்யம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்தியாவின் முன்னணி சினிமா பாடகர்களில் ஒருவரான எஸ்பி பாலசுப்பிரமணியன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கவலைக்கிடமாக உள்ளதாக அறிக்கை வெளியிட்டு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தினர். இதையடுத்து திரை பிரபலங்கள் , நண்பர்கள் ரசிகர்கள் என பலரும் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதையடுத்து இன்று அவரது மகன் எஸ்.பி சரண் தனது அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக கூறி சற்று நம்பிக்கை கொடுத்தார்.
ஆனால், இன்று மாலை மீண்டும் மருத்துமனை தரப்பில் இருந்து ஒரு அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், “எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்றும், அவரின் உடல்நிலையை அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது. அவருக்கு மிகச் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளனர். இது இசை ரசிகர்களுக்கு மீண்டும் அதிர்ச்சியை கொடுத்தது.
இந்நிலையில், எஸ்.பி சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘ என் தந்தையின் உடல்நிலை கவலைக்கிடம் என மருத்துவர்கள் கூறினாலும், அவரின் உடல் நிலை சீராகத்தான் இருக்கிறது. பயப்பட ஒன்றுமில்லை. உங்களின் வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்கிறேன். நீங்கள் காட்டிய அன்புக்கு மிகவும் நன்றி’ என அதில் பேசியுள்ளார்.
Dad is in same condition as yesterday which is stable. There are no complications and doctors feel it’s a very good sign says SPB Charan son of legendary singer SP. Balasubrahmanyam #SPBalasubramanyam #SPBCharan pic.twitter.com/w34sCotsMh
— Evon (@EvoNTweeTz) August 17, 2020