குளியல் காட்சி, படுக்கை காட்சி: விஜய் தேவரகொண்டாவின் அடுத்த பட டிரைலர்

அர்ஜுன் ரெட்டி’என்ற ஒரே படத்தால் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான விஜய்தேவரகொண்டா நடித்துள்ள அடுத்த திரைப்படம் ’வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ,ராஷிகன்னா, கேத்தரின் தெரசா மற்றும் இசபெல்லா ஆகிய நான்கு நடிகைகள் நாயகிகளாக நடித்துள்ளனர்

12dfedf5d75ee85c5d09f3dd122dc11c-1

அர்ஜுன் ரெட்டி’என்ற ஒரே படத்தால் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான விஜய்தேவரகொண்டா நடித்துள்ள அடுத்த திரைப்படம் ’வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ,ராஷிகன்னா, கேத்தரின் தெரசா மற்றும் இசபெல்லா ஆகிய நான்கு நடிகைகள் நாயகிகளாக நடித்துள்ளனர்

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. இந்த டிரைலரில் விஜய்தேவரகொண்டாவும் நான்கு நடிகைகளும்  சேர்ந்த படுக்கையறை காட்சிகள் மற்றும் குளியலறை காட்சிகள் இருப்பதால் இணையதளங்களின் பயங்கர வைரலாகியுள்ளது

அதுமட்டுமின்றி அர்ஜுன்ரெட்டி படம் போலவே விஜய்தேவரகொண்டாவின் கெட்டப் இருப்பதும், நடிப்பும் அதே சாயலில் இருப்பதும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இருப்பினும் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகும் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது மட்டும் உண்மை தான்

கிராந்த் மாதவ் இயக்கத்தில் கோபிசுந்தர் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை கிரியேட்டிவ்  கமர்ஷியல் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *