">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஆன்லைன் வகுப்பு புரியவில்லை.. 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை…
கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஆனாலும், சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆன்லன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.�
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள பரமப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்., இவரின் மகன் அபிஷேக் கொடைக்கானலில் உள்ள பள்ளியில் நடப்பு ஆண்டு 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 மாதங்களாக ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது.
ஆனால், ஆன்லைன் மூலம் நடத்தப்படும் பாடங்கள் தனக்கு புரியவில்லை என பெற்றோரிடம் அபிஷேக் தொடர்ந்து கூறி வந்துள்ளார். ஆனால், அதை பெற்றோர் ஏற்ககாமல் ‘ஒழுங்காக படி’ என அவரை கண்டித்துள்ளனர். ஒருபுறம் பெற்றோர் கண்டிப்பு, மறுபுறம் ஆசிரியரின் கேள்விகளுக்கு ஆன்லைனில் பதில் சொல்ல முடியாமல் மன உளைச்சல் அடைந்த அபிஷேக் வீட்டில் இருந்த பூச்சு மருந்தினை குடித்துவிட்டார்.
மயங்கி கிடந்த மகனைக்கண்டு கதறி அழுத பெற்றோர் தேனி அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.