">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நியூ யார்க் சிட்டியில் காதலனுடன் நயன்தாரா – வைரலாகும் கியூட் புகைப்படம்!
நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலிப்பது ஊரறிந்த விஷயம். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்கிறார்கள். தர்பார் படத்துக்காக நயன்தாரா மும்பை சென்ற போது கூட விக்னேஷ் சிவன் அங்கு சென்றுள்ளார்.
விக்னேஷ் சிவனின் குடும்பத்தினர் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. நயன்தாராவோ அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்ப்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்ப்போது நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் சேர்ந்து .நியூ யார்க் சிட்டிக்கு வெகேஷன் சென்ற போது எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ” இந்த கொரோனா ஊரடங்கில் ட்ராவிலிங் செய்வதை மிஸ் பண்ணுவதாக பீலிங்க்ஸுடன் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோ இணையத்தில் வைரலாக ” உனக்கு உன் பிரச்னை ” என விக்கியை கிண்டலத்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.