
தளபதி விஜய் நடித்து வரும் 64வது திரைப்படமான ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் ’தளபதி 65’ படத்தின் தகவல்கள் அவ்வப்போது இணையதளங்களில் வெளியாகி வருகிறது. குறிப்பாக ’தளபதி 65’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை ஷங்கர், ஏஆர் முருகதாஸ், பேரரசு, மோகன்ராஜா, அருண்ராஜா காமராஜ், மகிழ்திருமேனி ,வெற்றிமாறன் உள்பட ஒரு சில இயக்குனர்களின் பட்டியல் வெளியாகி இவர்களில் ஒருவர்தான் இந்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ’தளபதி 65’ படம் குறித்து தனது கருத்து என வாட்ஸ் அப்பில் பரவி வருவது போலியாக போட்டோஷாப்பில் உருவாக்கப்பட்டது என்றும் அது தன்னுடைய கருத்து இல்லை என்றும் கூறியுள்ளார்
அந்த போலியான போட்டோஷாப் பக்கத்தில் ’தளபதி 65’ படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்றும் அந்த படத்தை தயாரித்து இயக்குவது சங்கர் என்றும் அனிருத் தான் இசை அமைப்பாளர் என்றும் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த தகவலை ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஸ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
That’s not mine at all. Someone photoshopped.. @itz_chris_off https://t.co/s0LNpM0Cvm
— Jagadish (@Jagadishbliss) January 3, 2020

Leave a Reply