">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பிக்பாஸ் ஆரவ்விற்கு திருமணம் – மணப்பெண் இந்த ஹீரோயின் தான்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே ஆரவிடம் காதல் வசப்பட்டிருப்பதாக ஓவியா கூறினார். அவர் விளையாட்டாக கூறினாரோ இல்லை உண்மையிலேயே கூறினாரோ தெரியவில்லை. ஆனால், அதை ஆரவ் ஏற்கவில்லை.
அவருடன் நட்பாகவே பழகி வந்தார் ஆரவ். மற்ற யாரும் ஓவியாவிடம் அதிகம் பேசாமல் இருந்த போது, அவருக்கு ஆறுதலாக இருந்தார் ஆரவ். இதனால் ஓவியாவிற்கு அவர் மேல் அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனால், அவரின் எண்ணத்தை புரிந்து கொண்ட ஆரவ், அவரை தவிர்க்கும் வகையிலேயே நடந்து கொண்டார்.
இந்நிலையில் தற்போது ஆரவ் தமிழ் சினிமாவில் இளம் நடிகையான ராஹீ என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இவர் கௌதம் மேனன் இயக்கிய “ஜோஷ்வா” என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆரவ் – ராஹீ இருவருக்கும் வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாக வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.