விஜய்யுடன் மாறி மாறி மோதும் சூர்யா-கார்த்தி!

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியான நிலையில் அந்த படத்திற்கு போட்டியாக வெளியான திரைப்படம் கார்த்தியின் ’கைதி’. கார்த்தியின் ’கைதி’. திரைப்படம் பிகில் திரைப்படத்தை விட நல்ல லாபத்தை கொடுத்ததாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் வட்டாரங்கள்…

a5d16be29f25b045b2abbec1a7bdb8e3

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியான நிலையில் அந்த படத்திற்கு போட்டியாக வெளியான திரைப்படம் கார்த்தியின் ’கைதி’. கார்த்தியின் ’கைதி’. திரைப்படம் பிகில் திரைப்படத்தை விட நல்ல லாபத்தை கொடுத்ததாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் வட்டாரங்கள் கூறி வருகிறது 

இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படமான ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இதனை அடுத்து தற்போது சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படமும் அதே ஏப்ரல் 14 ஏப்ரல் புத்தாண்டு தினத்தில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது 

பிகில் மற்றும் கைதி மோதிய நிலையில் மாஸ்டர் மற்றும் சூரரைப்போற்று மோதுவது கிட்டத்தட்ட உறுதி என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ’தளபதி 65’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சூர்யா நடிப்பில் ஹரி இயக்க உள்ள திரைப்படமும் அதே தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விஜய்யுடன் கார்த்தி மற்றும் சூர்யா மாறி மாறி மோதி வருவது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *