
தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவராக குப்பு ராமு என்பவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
தமிழக பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து தன் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு சில மாதங்களாக அந்த பதவி காலியாக உள்ளது. இந்நிலையில் அந்த பதவிக்கு ஹெச் ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்பட்டது.
ஆனால் இப்போது இவர்கள் எவரும் இல்லாமல் குப்பு ராமு என்பவருக்குதான் அதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர் 2014 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டவர். விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பின் தமிழக தலைவராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.