
திரைப்பட நடிகையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நகரி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.வுமான ரோஜாவை அவரது சொந்த கட்சியினர்களே தாக்க முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நகரி தொகுதி எம்.எல்.ஏ மற்றும் ஆந்திர மாநில தொழில்துறை உட்கட்டமைப்பு கழக தலைவராக இருந்து வரும் ரோஜா, சித்தூர் மாவட்டம் கே.வி.புரத்தில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் கிராம தலைமை செயலகத்தை திறந்து வைப்பதற்காக சென்றார்.
அப்போது நகரி பகுதியை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகர் அம்முலு என்பவரின் ஆதரவாளர்கள் சுமார் 200 பேர் ரோஜாவின் காரை வழிமறித்து அவருக்கு எதிராக கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து ரோஜாவுடன் வந்திருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் அவரை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பதட்டமாக இருந்தது
நடிகை ரோஜாவுக்கும் அம்முலுவிற்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் இருந்து வருவதாகவும் அதன் காரணமாகவே அவரது ஆதரவாளர்கள் ரோஜாவை தாக்க முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ரோஜா தரப்பினர் கூறியபோது, தெலுங்கு தேசம் கட்சியினர் ரோஜாவை தாக்க முயன்றதாகவும் ஒய்.எஸ்.ஆர் .காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் எதுவும் இல்லை தெரிவித்தனர்.