">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
சத்தியமா நல்லா இல்ல அசிங்கமா ஆகிட்டீங்க – லாஸ்லியாவை கடுப்பேற்றும் ரசிகர்கள்
பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்
பிக்பாஸ் போட்டியாளர்களில் லாஸ்லியாவும் ஒருவர். இலங்கையை சேர்ந்த இவர் அங்கு தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர். பிக்பாஸ் வீட்டில் காலையில் பாடல் ஒலித்தவுடன் லாஸ்லியா அழகாக நடனமாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
முதல் சீசனில் ஓவியாவை போல், இந்த சீசனில் லாஸ்லியாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். அதில் கிடைத்த புகழை வைத்து பிரண்ட்ஷிப் மற்றும் ஆரியுடன் ஒரு படம் அடுத்ததாக அறிமுக இயக்குனருடன் ஒரு படம் என மொத்தம் மூன்று படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு சமயம் என்பதால் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்துவருகிறார். அவ்வப்போது ஏதேனும் புகைப்படங்கள் பதிவிடுவது வழக்கம். அந்தவகையில் தற்ப்போது ஃபுல் மேக்கப்பில் வித்யாசமான போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஆனால், இந்த போட்டோஸ் ரசிகர்ளின் பார்வையில் மோசமானதாக இருக்கிறது.