">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
வலிமை அப்டேட்..! ஒத்த வார்த்தை சொன்ன யுவன் சங்கர் ராஜா.. தல ரசிகர்கள் ஹேப்பி…
வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுவென நடைபெற்று வந்த நிலையில், கொரோனா விவகாரம் தொடர்பாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
ஏற்கனவே, படம் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகாததால் அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி படம் பற்றிய அப்டேட் வெளியாகும் என ஆர்வமுடன் காத்திருந்தனர். ஆனால், தல வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரின் டிவிட்டர் ஐடியை டேக் செய்து வலிமை பட அப்டேட்டை கேட்டு நச்சரித்து வருகின்றனர். ஆனாலும், மனுசன் வாயைவே திறப்பதில்லை.
இந்நிலையில், சமீபத்தில் இயக்குனர் வினோத்தின் பிறந்தநாளன்று அவருக்கு தல ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் வாழ்த்து தெரிவித்திருந்தார். அப்போது, ‘வலிமை பற்றி அப்டேட் கேட்டு சொல்லுங்க’ என தல ரசிகர்கள் ஒருவர் கேட்க, அதற்கு ‘விரைவில் அப்டேட் வரும்’ என யுவன் பதிலளித்திருந்தார்.
எந்த அப்டேட்டும் கிடைக்காத நிலையில், விரைவில் அப்டேட் வரும் என்பதையே முக்கிய அப்டேட்டாக கருதி தல ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
It’ll come soon….
— Raja yuvan (@thisisysr) September 6, 2020