
டெல்லி சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதி இந்த வாரம் அறிவிக்கப்படும் என ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் சற்று முன் தேர்தல் ஆணையம் டெல்லி சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவித்து உள்ளது. இதன்படி வரும் பொங்கல் முதல் அதாவது ஜனவரி 14 முதல் அங்கு தேர்தல் திருவிழா ஆரம்பம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள டெல்லி தேர்தல் தேதி குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்
வேட்புமனுத்தாக்கல் தொடங்கும் தேதி: ஜனவரி 14
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: ஜனவரி 21
வேட்பு மனுக்கள் பரிசீலனை: ஜனவரி 22
வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள்: ஜனவரி 24
தேர்தல் நாள்: பிப்ரவரி 8
வாக்கு எண்ணிக்கை: பிப்ரவரி 11
முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கையை பார்ப்போம்
ஆம் ஆத்மி கட்சி: 67
பாஜக: 3
காங்கிரஸ்: 3
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே பல்வேறு சலுகை திட்டங்களை அறிவித்து வாக்காளர்களை கவர்ந்துள்ளதால் டெல்லியில் அவர் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என்றே கருதப்படுகிறது