
காதல் படத்தில் அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலமானவர் சந்தியா. அதன்பின் வல்லவன், டிஷ்யூம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கடந்த 2015ம் ஆண்டு சந்திரசேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு குழந்தை உள்ளது. அவர் கடந்த சில வருடங்களாக போஸ்ட்பார்டம் ப்ளூஸ் என்கிற நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டால் காரணமில்லாம் அழுது கொண்டே இருப்பார்கள். சந்தியாவும் தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை அழுது கொண்டே இருப்பாராம். தீவிர சிகிச்சை மற்றும் குடும்பத்தினரின் ஆதரவால் அந்த நோயிலிருந்து அவர் மீண்டாராம். தற்போது முழுவதும் குணமாகி விட்ட அவர் தன்னை போல் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்கிறா நல்லெண்ணத்தில் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறாராம்.